January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிளிநொச்சியில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டன

கிளிநொச்சி கோரக்கன் காட்டுப் பகுதியில் உள்ள தனியார் காணியொன்றில் இருந்து இதுவரை ஒரு இலட்சத்துக்கும் அதிகமான துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.

விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து தொடர்ந்தும் வெடிபொருட்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தனியார் காணி ஒன்றில் அடையாளம் காணப்பட்ட இடத்தில் வெடி பொருட்களை மீட்கும் பணி நேற்று கோரக்கன் கிராம அலுவலர் கோணமலை சேகர் முன்னிலையில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்டது.

நேற்று காலை 9 மணி முதல் பிற்பகல் வரை முன்னெடுக்கப்பட்ட அகழ்வின்போது, ஒரு இலட்சத்து 9 ஆயிரம் துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.

நேற்று மாலை நிறுத்தப்பட்ட பணிகள் தொடர்ந்து இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.