File Photo
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் பங்களாதேஷ் பிரதமர் ஷைக் ஹசீனா ஆகியோருக்கு இடையே தொலைபேசி ஊடான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இரு தரப்பு உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக இருவரும் கலந்துரையாடியதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் இணைந்து முன்னெடுக்கக் கூடிய வேலைத்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாகவும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
இலங்கையின் உண்மை மற்றும் நேர்மையான நண்பராக இருக்கும் பங்காளாதேஷுடனான வரலாற்று நட்பை மதிப்பதாக தான் பங்களாதேஷ் பிரதமரிடம் கூறியதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
Had a phone conversation with PM H.E. Sheikh Hasina of #Bangladesh. We discussed areas both nations can work together to strengthen bilateral relations to mutually benefit our people. Bangladesh has been a true & sincere friend of #lka & we greatly value our historic friendship.
— Mahinda Rajapaksa (@PresRajapaksa) December 12, 2021