
மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 139 ஆவது பிறந்த தினம் இன்று யாழ்ப்பாணம் நல்லூரில் அனுஸ்டிக்கப்பட்டது.
இதன்போது அவரது திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் துணைத் தூதுவர் நட்ராஜ் ராஜேஸ் ஜெயபாஸ்கர், யாழ்.மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன், மாநகர சபை ஆணையாளர் ஜெ.ஜெயசீலன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.