
பிரியந்த குமாரவின் படுகொலைக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்த பிரதமர் இம்ரான் கான் மேற்கொண்ட முயற்சிகள் பாகிஸ்தான் மற்றும் இலங்கை இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் என அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமருக்கு எழுதிய கடிதத்திலேயே அவர் இதனை தெரிவித்தார்.
பிரதமர் இம்ரான் கானின் இந்த நடவடிக்கை அவரது வலிமையான தலைமையின் பிரதிபலிப்பு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் இம்ரான் கானின் பக்கச்சார்பற்ற முடிவுகள் இலங்கை-பாகிஸ்தான் இடையிலான நட்புறவை தொடர வழிவகுக்கும் என்றும் அந்தக் கடிதத்தில் மேலும் கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் இலங்கையர்களுக்கு பாதுகாப்பான சூழல் உருவாக்கப்படும் என தாம் நம்புவதாக மகாநாயக்கர் வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரர் தெரிவித்துள்ளார்.
மேலும், கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக பிரியந்த குமாரவின் குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.