
இலங்கையைச் சேர்ந்த பிரியன்த குமார கொலைச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியை பாகிஸ்தானின் பஞ்சாப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கொலைச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக இம்தியாஸ் எலியாஸ் பில்லி என்பவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் பிரியன்த குமாரவைக் கொலை செய்து, உடலை சித்திரவதை செய்யும் சம்பவத்தில் தொடர்புபட்டுள்ளதாக பஞ்சாப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தைத் தொடர்ந்து தலைமறைவாகி இருந்த நிலையில், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுவரையில் 27 பிரதான சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 132 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.