யுத்த காலப்பகுதியில் விடுதலைப் புலிகளினால் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டதாக நம்பப்படும் தங்கத்தை தேடி மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகள் நிறைவுக்கு வந்துள்ளன.
முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி டி.சரவணராஜா முன்னிலையில் இந்த அகழ்வு நடவடிக்கைகள் பொலிஸாரால் கடந்த 2 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
இருப்பினும் அன்றைய தினம் பெய்த கனமழை காரணமாக குறித்த பகுதிக்கு கனரக இயந்திரங்களை கொண்டு செல்ல முடியாத நிலை காணப்பட்டதால் அந்த நடவடிக்கை 3 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 3 ஆம் திகதி முதல் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன், இன்றைய தினத்தில் அது நிறைவுக்கு வந்துள்ளது.
எனினும் அங்கிருந்த தங்க நகைகள் எதுவும் கிடைக்கவில்லை. தகரத்துண்டு மற்றும் உரப்பை கயிறு போன்ற பொருட்களே கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது.