பாகிஸ்தான் சியல்கொட் நகரில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் உடல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான ‘யூ.எல் 186’ என்ற விமானத்தின் ஊடாக இன்று மாலை 5.10 மணியளவில் அவரது உடல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் சியல்கொட் நகரிலுள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றில் கும்பலொன்றினால் பிரியந்த குமார கொலை செய்யப்பட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து அவரின் உடல் மரணப் பரிசோதனையின் பின்னர் இலங்கைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இதன்படி இலங்கை அரசின் செலவில் உடல் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
தற்போது பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள பிரியந்த குமாரவின் உடல் வைத்தியசாலையில் பரிசோதனைகளின் பின்னர் கணேமுல்லையில் உள்ள அவரின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிக் கிரியை நடத்தப்படவுள்ளது.
Senior cleric @TahirAshrafi along with other govt officials manage the coffin of #SrilankanManager, #PriyanthaKumara before it departs for #SriLanka sending a clear message that the Pakistani people including clergy stands by the family of #Priyantha. #Sialkot #Sialkot_incident pic.twitter.com/T3DH07kj40
— Hamza Azhar Salam (@HamzaAzhrSalam) December 6, 2021