June 12, 2025 17:37:04

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஒமிக்ரோன்’ தொற்றுடன் இலங்கையில் ஒருவர் அடையாளம்!

File Photo

‘ஒமிக்ரோன்’ வைரஸ் தொற்றுடன் இலங்கையில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஆபிரிக்க நாடொன்றில் இருந்து அண்மையில் நாடு திரும்பியிருந்த இலங்கையர் ஒருவருக்கே இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

‘ஒமிக்ரோன்’ பரவும் நாடுகளில் இருந்து கடந்த வாரங்களில் இலங்கை வந்திருந்தவர்களிடம் மாதிரிகளை பெற்று நடத்தப்பட்ட பரிசோதனையில் குறித்த நபருக்கு தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு இன்று அறிவித்துள்ளது.

இதேவேளை நாட்டில் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதனால் மக்களை சுகாதார ஒழுங்குவிதிகளை பின்பற்றி நடந்துகொள்ளுமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.