
சீனாவுடன் செய்துகொண்ட ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கையை மாற்றமின்றி முன்னெடுத்துச் செல்ல ஜனதிபதி மற்றும் பிரதமர் இணங்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே, அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 70 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளதாகவும் அதனை விற்பனை செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இப்போது செய்யப்பட்டுள்ள உடன்படிக்கைக்கு அமைய நாளைக்கு என்றாலும் இலங்கையால் உடன்படிக்கையை நீக்கிவிட்டு, துறைமுகத்தை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அதற்காக நஷ்டஈடு மாத்திரமே செலுத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
சீனாவுடனான உடன்படிக்கையில் ஒரு பில்லியன் டொலர்களைப் பெற்றுக்கொண்டதாகவும், அதனை வெளிநாட்டு கையிருப்பில் சேர்த்து, வர்த்தக கடன்கள் அடைக்கப்பட்டதாகவும் ரணில் சுட்டிக்காட்டியுள்ளார்.