May 13, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எதிர்க்கட்சிக்கு ‘சீன மேனியா’ நோய் தொற்றியுள்ளது: அமைச்சர் ரோஹித

எதிர்கட்சியினருக்கு இன்று சீன மேனியா நோய் தொற்றியுள்ளதாகவும், அரசாங்கம் சீனாவுடன் முன்னெடுக்கும் அபிவிருத்தி வேலைத் திட்டங்களை விமர்சித்துக்கொண்டிருப்பதே அவர்களின் வேலையாக மாறியுள்ளதாகவும் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய பணிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவுக்கு கொண்டுவந்து, அடுத்த ஆண்டில் கட்டம் கட்டமாக அதன் பணிகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று, மேற்கு முனையத்தை அதானி நிறுவனத்துடன் இணைந்து அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் தெற்கு மற்றும் மேற்கு முனையங்களை இலங்கைக்கான துறைமுக முனையங்களாக மாற்றுவோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பு துறைமுகத்தை மட்டுமல்ல, காலி துறைமுகம், திருகோணமலை இயற்கை துறைமுகம் ஆகியவற்றையும் அபிவிருத்தி செய்யவுள்ளதாகவும் அமைச்சர் ரோஹித தெரிவித்துள்ளார்.