2022 ஜனவரி மாதம் முதல் பஸ் கட்டணங்களில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி ஆகக் குறைந்தக் கட்டணத்தை 15 ரூபா வரையிலும் 14 ரூபாவாக இருக்கும் கட்டணத்தை 20 ரூபா வரையிலும் அதிகரிக்க வேண்டும் என்று அந்தச் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.
எரிபொருள் மற்றும் வாகன உதிரிப்பாகங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை மற்றும் தற்போதைய வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு ஆகிய காரணங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த விலை அதிகரிப்பைக் கோருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் போக்குவரத்து அமைச்சு ஆகியவற்றுக்கு அறிவித்துள்ளதாகவும் கெமுனுவிஜேரட்ன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பஸ் கட்டணங்களை அதிகரிப்பதற்கு இடமளிக்கப் போவதில்லை என்று போக்குவரத்த அமைச்சர் பவித்திரா வன்னியராச்சி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.