‘ஒமிக்ரோன்’ வைரஸ் இலங்கைக்கு நுழைவதை கட்டுப்பாடுகளின் மூலம் தடுக்க முடியுமென்று நினைக்கவில்லை என்று ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் மூலக்கூறு அறிவியல் துறையின் பிரதானி பேராசிரியர் நீலிகா மாலவிகே தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரோன் வைரஸ் தொடர்பில், ஜனாதிபதி ஊடக மையத்தினால் இன்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தென்னாபிரிக்காவில் ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் தற்போது 24 நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், ஐரோப்பிய நாடுகளில் இரண்டு வாரங்களுக்கு முன்னரே இது பரவியிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நிலைமையில் சுகாதார அமைச்சின் அறிவிப்புக்கமைய, டெல்டாவை விடவும் இது வேகமாக பரவும் தன்மை கொண்டதாக இருந்தால். ‘ஒமிக்ரோன்’ பிரழ்வு இலங்கைக்குள் பரவுவதை கட்டுப்பாடுகளின் மூலம் தடுக்க முடியாது என்றும், அது நாட்டுக்குள் பரவ வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றது என்றும் நீலிகா மாலவிகே தெரிவித்துள்ளார்.