வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் நாவலர் வீதியிலுள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்னால் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
‘வலிந்து காணாமல்போனோருக்கு மரணச் சான்றிதழ் வேண்டாம், இழப்பீடு வேண்டாம் மற்றும் காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகமும் வேண்டாம் என்றும் எங்களுக்கு சர்வதேசம் நீதியை பெற்றுத்தர வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தெரிவித்தனர்.
ஒவ்வொரு மாதமும் 30ஆம் திகதியில் உறவுகள் போராட்டத்தில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது .