கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்தில் நாட்டை முடக்குவதற்கு இதுவரையில் எந்தக் கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என்று அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே, அவர் இதனைக் கூறியுள்ளார்.
வெற்றிகரமாக தடுப்பூசிகளை செலுத்தி மீண்டும் நாட்டை திறந்துள்ளோம். ஆனால் இதனூடாக நாட்டில் கொவிட் தொற்று முற்றாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது கருதக் கூடாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பண்டிகைக் காலத்தில் மக்கள் பொறுப்புடன் தமது பாதுகாப்பையும் குடும்பத்தின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் சுகாதார ஒழுங்குவிதிகளைப் பின்பற்றி, நடந்துகொள்ள வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, நாட்டை மூடுவது தொடர்பாக இதுவரையில் உத்தியோகபூர்வமாக எந்தக் கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என்றும், அவ்வாறு மூடுவதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை என்றும் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.