July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”பாணின் விலை 100 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும்”

பாண் ஒன்றுக்கான அதிகபட்ச விலை 100 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது பேக்கரி பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், 450 கிராம் பாணின் குறைந்தபட்ச விலை 100 ரூபாவாக இருக்க வேண்டும் என சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டில் ஏற்கனவே கோதுமை மாவிற்கு பாரியளவில் தட்டுப்பாடு நிலவி வருவதாக சங்கத்தின் தலைவர் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டில் இரண்டு கோதுமை மா இறக்குமதி நிறுவனங்கள் மட்டுமே உள்ள நிலையில் அவை மா இறக்குமதி செய்ய டொலர் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த நிலையில் நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக நேற்று ஒரு கிலோகிராம் கோதுமையின் விலை 17.50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

முன்னதாக கோதுமை மாவின் விலை இரு சந்தர்ப்பங்களில் உயர்த்தப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

அத்தோடு, பாண் உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்தப்படும் பொருட்களில் தண்ணீரைத் தவிர ஏனைய அனைத்து பொருட்களினது விலைகளும் ஏற்கனவே அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜெயவர்தன மேலும் கூறினார்.