எரிபொருள் விலை சூத்திரத்தை நடைமுறைப்படுத்துவது இந்த தருணத்தில் நாட்டுக்கு நன்மை பயக்கும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாடு எதிர்கொண்டுள்ள எரிபொருள் விலை நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் எரிபொருள் விலை சூத்திரத்தை நடைமுறைப்படுத்துவது சிறந்தது என அவர் மேலும் கூறினார்.
எரிபொருள் விலை நிர்ணய குழுவை ஸ்தாபிப்பதே இலங்கைக்கு பொருத்தமானது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
எனினும் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்திருப்பதன் காரணமாக எரிபொருள் விலை நிர்ணய குழுவை ஸ்தாபிப்பதன் மூலம் நாட்டு மக்களுக்கு எந்தவித நிவாரணத்தையும் வழங்க முடியாது என அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, எரிபொருள் விலை சூத்திரத்தையேனும் நடைமுறைப்படுத்துவது அரசாங்கத்திற்கு நன்மை அளிக்கும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில கூறினார்.
இதேவேளை, அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்திற்குள் நாட்டிற்கு தேவையான எண்ணெய் இருப்புக்களை இறக்குமதி செய்வதற்கான அனைத்து திட்டங்களும் இறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.