May 15, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பருவநிலை மாற்றம் தொடர்பான முன்னேற்றங்களை தடுக்கவில்லை’: சவூதி பிரிட்டனுக்கு பதில்

பருவநிலை மாற்றம் தொடர்பான முன்னேற்றங்களை தடுக்கவில்லை என்று சவூதி அரேபியா பதிலளித்துள்ளது.

ஐநா பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு ஸ்கொட்லாந்தில் நடைபெற்று வரும் நிலையில், அதன் முன்னேற்றங்களுக்கு சவூதி தடையாக உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தாம் குறித்த குற்றச்சாட்டுக்களை மறுப்பதாகவும், அதில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் சவூதி குறிப்பிட்டுள்ளது.

சவூதி அரேபியா பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டின் தீர்மானங்களை உறுதியாக ஆதரிப்பதாக இளவரசர் அப்துல் அஸீஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலக எரிபொருள் ஏற்றுமதியில் சவூதி முன்னணி வகிக்கிறது.

இந்நிலையில், கார்பன் பாவனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நீண்ட காலத் தீர்வுக்கான கலந்துரையாடல்களை உலகத் தலைவர்கள் ஆரம்பித்துள்ளனர்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் சவூதி அரேபிய இளவரசர் மொஹம்மட் பின் சல்மானுக்கு தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டு, இதுகுறித்து கலந்துரையாடியுள்ளார்.