April 22, 2025 18:48:13

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!

இலங்கையில் அரச பாடசாலை மாணவர்களுக்கு  டிசம்பர் 23 முதல் 26 ஆம் திகதி வரை விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகைகயை முன்னிட்டு இந்த விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

இதன்படி மீண்டும் டிசம்பர் 27 ஆம் திகதி முதல் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் கொவிட் பரவல் காரணமாகப் 6 மாதங்களாக கல்வி நடவடிக்கைகள் முடக்கப்பட்ட நிலையில் தற்போது பாடசாலைகள் கட்டம் கட்டமாக மீண்டும் திறக்கப்பட்டு, கல்வி செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.