
இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக எல்.எம்.டி தர்மசேன நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரையில் பரீட்சைகள் ஆணையாளராக பதவி வகித்த பீ. சனத் பூஜித இன்றுடன் ஓய்வுபெறவுள்ளார்.
இதன்படி புதிய பரீட்சைகள் ஆணையாளராக கல்வி அமைச்சின் பாடசாலை விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் எல்.எம்.டி தர்மசேன நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் அடுத்த வாரத்தில் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
சனத் பூஜித 2017 ஆண்டு நவம்பர் மாதம் முதல் பரீட்சை ஆணையாளர் நாயகமாக பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.