இலங்கையில் கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 27 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து நாட்டில் கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,232 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 19 ஆண்களும் 8 பெண்களும் அடங்குவதுடன், அவர்களில் ஏழு பேர் 30-59 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்தோடு உயிரிழந்தவர்களில் மீதமுள்ள 20 பேரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் வியாழக்கிழமை (25) மாலை வரை மேலும் 529 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 560,134 ஆக அதிகரித்துள்ளது.