January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘படகுப் பாதை’ விபத்து: கிண்ணியா நகர சபைத் தவிசாளர் கைது!

கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறிஞ்சாக்கேணி பகுதியில் 23 ஆம் திகதி இடம்பெற்ற படகுப் பாதை விபத்துச் சம்பவம் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக இன்றைய தினம் கிண்ணியா பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த படகுப் பாதை சேவையை நடத்துவதற்கான அனுமதி வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள கிண்ணியா நகர சபைத் தவிசாளர் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இதேவேளை படகுப் பாதை விபத்து சம்பவம் தொடர்பில் படகின் உரிமையாளர், படகை இயக்கியவர் மற்றும் கட்டணம் அறவிடுபவர் உள்ளிட்ட மூவர் நேற்றைய தினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.