
‘படகுப் பாதை’ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், திருகோணமலை கிண்ணியாவில் இன்று துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
அனைத்து வீடுகள், கடைகள், அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் வௌ்ளை கொடிகளை பறக்கவிட்டு, அமைதியான முறையில் துக்க தினத்தை அனுஷ்டிக்குமாறு சிவில் சமூக ஒன்றியம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒன்றுகூடல்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை தவிர்த்து அனைவரும் தங்களின் வீடுகளிலேயே பாதிக்கப்பட்டவர்களுக்காக விசேட பிரேர்தனைகளில் ஈடுபடுமாறும் அந்த ஒன்றியம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதன்படி இன்றைய தினம் அந்தப் பிரதேசத்தில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
கடந்த செவ்வாய்க்கிழமை கிண்ணியாவில் படகுப் பாதை கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் நான்கு சிறுவர்கள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் குறித்த விபத்து சம்பவம் தொடர்பில், படகுப்பாதையின் உரிமையாளர், அதனை செலுத்துபவர் மற்றும் போக்குவரத்து கட்டணம் அறவிடும் நபர் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, எதிர்வரும் 8 ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.