
கிண்ணியாவில் இடம்பெற்ற ‘படகுப் பாதை’ விபத்து சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த விபத்தால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடுகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 11 ஆம் திகதி, நிமல் லன்சா அந்தப் பகுதியில் பாலத்தை அமைப்பதற்கான அடிக்கல்லை நாட்டிய போதும், அது தொடர்பான வேலைத்திட்டம் ஸ்தம்பிதமடைந்திருந்ததாக சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், அங்கு மக்கள் பயணிப்பதற்கான படகுப் பாதை விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும், அந்த விபத்தில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கம் நிவாரணங்கள் மற்றும் இழப்பீடுகளை வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று குறித்தப் படகுப் பாதை இயங்கிய முறை மற்றும் அதன் சட்டப்பூர்வ தன்மை ஆகியன குறித்து முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் சஜித் பிரேமதாஸ சபையில் வலியுறுத்தியுள்ளார்.