January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரஞ்சன் இருக்கும் சிறைக்கூடத்தில் இருந்து கைத்தொலைபேசி மீட்பு: விசாரணை ஆரம்பம்!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிடமிருந்து சிறைக்கூடத்தில் இருந்து கைத்தொலைபேசி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

நோய் நிலமை காரணமாக வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ரஞ்சன் ராமநாயக்கவிடம் நேற்று (21) இரவு 10 மணியளவில் சிறைச்சாலை வைத்தியசாலை அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போதே இவ்வாறு கையடக்க தொலைபேசி மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து மூவரடங்கிய நீதிபதிகள் முன் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீதிமன்ற அவமதிப்பு சம்பவத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, ரஞ்சன் ராமநாயக்கவுக்கு மூன்று நீதிபதிகளை உள்ளடக்கிய நீதியரசர்கள் குழாம் கடந்த ஜனவரி 12 ஆம் திகதி நான்கு வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்தது.

தற்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் அங்குணுகொலபெலெஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இவர் அண்மையில் பென்டோரா பத்திரங்களில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பான ஆதாரங்களை வெளியிடத் தயாராக இருப்பதாக இலஞ்ச மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் தலைவருக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.