May 29, 2025 0:47:11

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் மேலும் 31 கொவிட் தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

நாட்டில் கடந்த வாரங்களில் 20க்கும் குறைவான கொவிட் மரணங்களே பதிவாகி வந்த நிலையில், நேற்று முதல் இந்த எண்ணிக்கை 30ஐ கடந்துள்ளது.

இதையடுத்து நாட்டில் கொவிட் தொற்று காரணமான உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,158 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை இன்றைய தினம் நாட்டில் மேலும் 538 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதையடுத்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 557,164 ஆக உயர்வடைந்துள்ளது.