November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கிலுள்ள முதலீட்டாளர்களுடன் மத்திய வங்கி ஆளுநர் சந்திப்பு

வடக்கு மாகாணத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தலைமையில் விசேட கூட்டமொன்று யாழில்  நடைபெற்றது.

இலங்கை மத்திய வங்கியின் கிளிநொச்சி பிராந்தியக் கிளையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் இன்று காலை இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.

வட பிராந்தியத்துடன் தொடர்புடைய பங்குதாரர்களின் ஒத்துழைப்புடன் பிராந்தியத்தின் நிலையான வளர்ச்சியை அடைவதற்கான ஒருங்கிணைந்த பொறிமுறையை உருவாக்குதல் மற்றும் சிக்கல்களை கையாள்வதற்கான சாத்தியமான தீர்வுகள் மற்றும் உத்திகள் வழங்குவதை நோக்காக கொண்டு இந்த விசேட கூட்டம் இடம்பெற்றது.

இதில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநர்கள், வங்கிகளின் பிராந்திய பொது முகாமையாளர்கள், சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டாளர்கள் எனப்பலரும் பங்கேற்றனர்.

இதன்போது முதலீட்டாளர்களின் பிரச்சினைகளைக் நேரடியாக கேட்டறிந்த மத்திய வங்கி ஆளுநர், அதற்கான தீர்வுகளை வட மாகாண ஆளுநர், அரச அதிபர்கள் மற்றும் மற்றும் வங்கி அதிகாரிகளுடன் கலந்துரையாடி முன்வைப்பதாக கூறியுள்ளார்.

This slideshow requires JavaScript.