
பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுகின்ற சகல முச்சக்கர வண்டிகளிலும் கட்டண அளவீட்டு கருவிகள் பொருத்துவதை கட்டாயமாக்கவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு பின்னர் மேல் மாகாணத்தில் இருந்து இந்த செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கும் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மூன்று மாதங்களில் கட்டண அளவீட்டு கருவி பொருத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அத்தோடு கட்டண அளவீட்டு கருவி இன்றி பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.