நாட்டில் கார்பெட் வீதிகளை அமைப்பதற்கு முன்னர் நாளொன்றுக்கு ஒருவேளை மாத்திரம் உணவை உட்கொள்ளும் ஏழை மக்களுக்கு ஏதாவது உதவிகளை வழங்க வேண்டும் என ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
“நாட்டில் சாலைகள் அமைத்து, அபிவிருத்திகளை மேற்கொள்வது நல்லது தான். ஆனால், அதற்கு முன், பசியில் இருக்கும் நாட்டு மக்களுக்கு அதனை போக்க ஏதாவது செய்ய வேண்டும்” என்று அவர் கூறினார்.
“நாட்டில் உள்ள வாக்காளர்களில் 52% பெண்கள்” ஆக இருக்கும் நிலையில் வரவு-செலவுத் திட்டத்தில் பெண்களுக்கு 3% மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பெண்கள் மீது அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் இதன்போது சுட்டிக்காட்டினார்.