July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘காணாமல் போனோரது உறவுகளின் எதிர்பார்ப்பு ஜனாதிபதியிடம் வெளிப்படுத்தப்பட வேண்டும்’: டக்ளஸ்

காணாமல் போனோரது உறவுகள் தன்னைச் சந்தித்து வெளிப்படுத்தியுள்ள எதிர்பார்ப்புகளை ஜனாதிபதியிடமும் வெளிப்படுத்தி, நியாயமான கலந்துரையாடலுக்கு முன்வர வேண்டுமென கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோர் தொடர்பில் பரிகாரம் காண்பதற்கான ஒரு மனிதாபிமான செயலாக 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிதி ஒதுக்கீடு தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டாலும், இப்பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது வரவேற்கத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“உறவுகள், தோழர்கள், என்னோடு பழகியவர்கள் காணாமல் போனதன் வலியை நான் உளமார உணர்ந்தவன்.

அந்தவகையில், காணமல் போன உறவுகளது உறவினர்களது உணர்வுகளையும் நான் அறிவேன்.

காணாமல் போனோரது உறவுகள் என்னைச் சந்தித்து, என்னிடம் வெளிப்படுத்தியுள்ள எதிர்பார்ப்புகளை ஜனாதிபதியிடமும் வெளிப்படுத்தி, நியாயமான கலந்துரையாடலுக்கு முன்வர வேண்டும்”

என அமைச்சர் டக்ளஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.