January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனுக்கு கொவிட் தொற்று உறுதி!

Mano Ganesan | Facebook

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனுக்கு  கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மனோ கணேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில் தனக்கு செய்யப்பட்ட என்டிஜன் சோதனையில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு தான் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைபெற்று வருவதாகவும் விரைவில் குணமடைந்துவிடுவேன் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.