June 17, 2025 7:59:11

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எதிர்க்கட்சியின் பேரணியால் கொழும்பில் வாகனப் போக்குவரத்து பாதிப்பு

எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியால் கொழும்பில் வாகனப் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பேரணியாக கொழும்புக்கு வந்துள்ளனர்.

ஆரம்பத்தில் எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்டத்துக்கு நீதிமன்றங்கள் தடை உத்தரவு பிறப்பித்திருந்தாலும், பின்னர் சுகாதார வழிகாட்டல்களைப் பேணி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, கொழும்புக்கு வரும் எதிர்க்கட்சி பேரணியைத் திருப்பி அனுப்பவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

கொழும்பின் தாமரைத் தடாக வீதி, கொள்ளுப்பிட்டிய, காலி முகத்திடல் வீதி ஆகியவற்றில் வாகனப் போக்குவரத்து முழுமையாக தடைப்பட்டுள்ளது.