
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள கொழும்புக்கு வரும் பஸ்களை திருப்பியனுப்பும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்டத்துக்கு சில நீதிமன்றங்கள் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதோடு, சில நீதிமன்றங்கள் தடை உத்தரவு பிறப்பிக்க மறுத்துள்ளன.
சுகாதார விதிமுறைகளை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடியாது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மக்கள் நலன் கருதி, தாம் தடைகளைத் தாண்டி ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளச் செல்லும் பஸ் வண்டிகளை பொலிஸார் வழிமறித்ததைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸ் நிலையங்களுக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.