இலங்கையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நேற்று முன்தினம் (12) நிதி அமைச்சரினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து பலரும் தமது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் “புடலங்காய் வரவு – செலவு திட்டம்” என்றும் ஏமாற்று வேலை எனவும் முருந்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.
நாள் கூலிக்கு தொழில் செய்து வாழ்க்கையை நடத்தும் மக்களுக்கு வரவு செலவு திட்டத்தில் எந்தவித நிவாரணமும் கிடைக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன் பின்னர் கிராமத்துடன் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள முடியுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளதாகவும் அவ்வாறு செல்பவர்கள் கிராம மக்களால் அடித்து விரட்டப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.