November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘புலமைப் பரிசில், சாதாரண, உயர் தரப் பரீட்சை வினாத்தாள் தயாரிப்பில் மாற்றம்’: கல்வி அமைச்சு

இலங்கையில் புலமைப் பரிசில், உயர் தரம்  மற்றும் க.பொ.த சாதாரண தர பரீட்சை வினாத்தாள்களை தயாரிப்பதில் மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கொவிட் தொற்று பரவல் காரணமாக பாடசாலைகள் நீண்ட நாட்களாக மூடப்பட்டதையடுத்து, எதிர்காலத்தில் குறித்த பரீட்சைகளுக்கான வினாத்தாள் தயாரிப்பில் சில மாற்றங்களை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

“இனியும் பாடசாலைகள் மூடப்படாது, பரீட்சைகள் நடத்தப்பட வேண்டும். நிபுணர்களின் பரிந்துரைகளின்படி, சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகள் தொடரும்”

என கல்வி அமைச்சின் பாடசாலை விவகாரங்களுக்கான பிரதி செயலாளர் எல்.எம்.டி. தர்மசேன  குறிப்பிட்டார்.

இதேவேளை, தரம் 11- 13 வரையிலான பாடசாலை மாணவர்களில் 73% வீதமானவர்களுக்கு கொவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.