November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

2022 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் கல்வித் துறைக்கு 7.51% நிதி ஒதுக்கீடு

இலங்கையில் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் கல்வித் துறைக்கு 7.51 வீதம் நிதி ஒதுக்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நாட்டில் இதுவரையான வரவு-செலவு திட்டத்தில் கல்வித் துறைக்கு 6 சதவீதத்திற்கும் அதிகமான விகிதத்தை ஒதுக்குவது இதுவே முதல் முறை என நிதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகளை களைவதற்கு அடுத்த வரவு-செலவுத் திட்டத்தில் மொத்தமாக 30 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும் எனவும் நிதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இது கடினமான நடவடிக்கை என்றாலும், எதிர்வரும் பட்ஜெட்டில் இந்த முழுத் தொகையையும் ஒதுக்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்டம் இந்த வாரம் வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.