January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தரம் 10 முதல் 13 வரையான மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் மீள ஆரம்பம்

நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளிலும், தரம் 10 முதல் 13 வரையான மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் இன்று (08) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

கல்விப் பொதுத் தராதர சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்காக குறித்த வகுப்புகளுக்கான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

பாடசாலைக்குள் முகக்கவசம் அணிதல், கைகளைக் கழுவுதல், சமூக இடைவெளியை பேணுதல் முதலான சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவது கட்டாயமானதாகும்.

கொவிட் பரவல் நிலையானது ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்து, நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் உள்ள ஆரம்பப் பிரிவுகள் கடந்த மாதம் 25 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.