May 24, 2025 10:57:12

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிராமத்திற்குள் கடல் நீர் புகுந்தது: மன்னார் விடத்தல் தீவு மக்கள் பாதிப்பு!

மன்னார் மாவட்டத்தில் நிலவும் தொடர் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு கிராமங்களுக்குள் கடல் நீர் புகுந்துள்ளது

இதனால் விடத்தல் தீவு கிராமத்தில் மூன்று கிராம அலுவலர் பிரிவுகளில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.

இதேவேளை விடத்தல் தீவில் மீனவர்களின் படகுகள் சில சேதமடைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், விடத்தல் தீவு கிராமத்திற்குச் சென்று நிலமையை அவதானித்ததோடு, பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்தார்.

மேலும் உரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு வினவியதோடு, உரிய கிராம அலுவலரை சந்தித்து பாதிப்பு தொடர்பாக அறிந்து கொண்டார்.

மேலும் பாதிக்கப்பட்ட மீனவர்களை சந்தித்து அவர் கலந்துரையாடியுள்ளார்.