நாட்டில் நிலவும் டொலர் பிரச்சினை காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
இதன் காராணமாக ஒரே தடவையில் அதிகமான அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வது சிக்கலை ஏற்படுத்தும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அரிசி மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ள போதிலும் 10,000 முதல் 15,000 வரையான மெட்ரிக் தொன் அரிசியை மட்டுமே இறக்குமதி செய்ய முடியும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
டொலர் பிரச்சினையும் அரிசி இறக்குமதிக்கு தடையாக உள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.