
அமைச்சர் மொஹமட் அலி சப்ரி நீதி அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஆகியவற்றை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை ஜனாதிபதியிடம் வழங்கியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
எனினும், நீதி அமைச்சர் அலி சப்ரியின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கையேற்க மறுத்துள்ளதாகவும் அரசாங்க தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘ஒரே நாடு- ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணியின் தலைவராக கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டதற்கு நீதி அமைச்சர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் சட்டங்களை இயற்றுவதற்கு வழிமுறைகள் இருக்கும் போது, செயலணிகள் மூலம் சட்டங்களை இயற்ற முற்படுவது சிக்கலானது என்று நீதி அமைச்சர் ஜனாதிபதியிடம் குறிப்பிட்டுள்ளார்.
‘ஒரே நாடு- ஒரே சட்டம்’ தொடர்பில் விளக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்காக தான் குறித்த செயலணியை நியமித்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.