இலங்கையில் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் 8 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய அனைத்துப் பாடசாலைகளிலும் 10, 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் முன்னர் அறிவிக்கப்பட்டமைக்கு அமைய திங்கட்கிழமை முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளது.
கொவிட் தொற்றுநோய் காரணமாக பல மாதங்களாக மூடப்பட்ட பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை கட்டம் கட்டமாக ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
முதல் கட்டமாக 1 முதல் 5 வரையான வகுப்புகள் அக்டோபர் 25 முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில் இரண்டாம் கட்டத்தின் கீழ் 10, முதல் 13 வரையான வகுப்பு மாணவர்களின் வகுப்புகளை மீண்டும் ஆரம்பிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கல்வி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவது தொடர்பாக கொவிட்-19 கட்டுப்பாட்டுக்கான பரிந்துரைகளை சிறப்புக் குழு ஏற்கனவே வெளியிட்டுள்ளது.
எனினும் 6 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு பாடசாலை கல்வி மீண்டும் தொடங்கப்படவில்லை. இதற்கு தேவையான நடவடிக்கைகள் உரிய நேரத்தில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.