இலங்கையில் பொது இடங்களில் கொவிட் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கனேடிய உயர்ஸ்தானிகருடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே சுகாதார அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கனடாவில் பொது இடங்களுக்குள் நுழையும் போது முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளமை உறுதி செய்வதற்கான அட்டை கட்டாயமானது என்று கனேடிய உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் சுட்டிக்காட்டினார்.
இதன்போது குறிப்பிட்டுள்ள சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, ஐரோப்பிய நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இந்த திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.
இதனிடையே, நாட்டில் இதுவரை 28,520 பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.