மீண்டும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை உயர்த்துமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபையிடம் இலங்கையின் ‘லாஃப்ஸ்’ நிறுவனம் அனுமதி கோரியுள்ளது.
எரிவாயு சிலிண்டர்களுக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்க அரசாங்கம் ஏற்கனவே முடிவு செய்துள்ள நிலையில், லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் இதுவரை இரண்டு முறை விலையை உயர்த்தியுள்ளது.
விலை உயர்த்தப்பட்ட போதிலும் சந்தையில் தொடர்ந்தும் எரிவாயு சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
நாட்டில் நிலவும் டொலருக்கான தட்டுப்பாடு காரணமாகவே இவ்வாறு எரிவாயு சிலிண்டர்கள் இறக்குமதி செய்வதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.