இலங்கையில் டொலருக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடுகள் காரணமாக அதிகமான அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதில் சிக்கல் தோன்றியுள்ளது.
இந்நிலையில் எதிர்காலத்தில், பொருட்கள் மற்றும் எரிபொருள் விலைகள் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, சீனியை இறக்குமதி செய்வதற்கு தேவையான டொலர்களை பெற்றுக் கொள்வது தொடர்பில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸவிற்கும் சீனி இறக்குமதியாளர்களுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
இதனிடையே, டொலர் தட்டுப்பாடு காரணமாக எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ‘லிட்ரோ’ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
‘லிட்ரோ’ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்களின் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு சந்தையில் கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் விசனம் வெளியிட்டுள்ளனர்.