July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அவுஸ்திரேலியா 600 நாட்களுக்கு பின்னர் தனது சர்வதேச எல்லைகளை திறந்தது!

அவுஸ்திரேலியா தொற்று நோயின் பின்னர் முதல் முறையாக தனது சர்வதேச எல்லைகளை நியூசிலாந்து மற்றும் சிங்கப்பூர் பயணிகளுக்கு திறக்கின்றது.

தொற்று நோய் காரணமாக கிட்டத்தட்ட 600 நாட்களுக்கு வெளிநாட்டு பயணிகளுக்கு சர்வதேச எல்லைகளை அவுஸ்திரேலியா மூடியது.

எனினும் தற்போது நாடு மீண்டும் படிப்படியாக கட்டுப்பாடுகளை நீக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இதன்படி, திங்கட்கிழமை முதல் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்ட நியூசிலாந்து பயணிகள் பயணத்திற்கு முன்னர்  தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டால் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.

இத்தோடு நவம்பர் 21 ஆம் திகதி முதல் சிங்கப்பூர் பயணிகள் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியாவிற்குள் தனிமைப்படுத்தப்படாமல் நுழையலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இந்த நிலைமைகள் சில மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களில் வேறுபடலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

“அவுஸ்திரேலியா சிங்கப்பூருக்கும் நியூசிலாந்திற்கும் தனது எல்லைகளை திறப்பதாக மோரிசன் ஞாயிற்றுக்கிழமை ரோமில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.