‘லிட்ரோ’ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்களின் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு சந்தையில் கடுமையான தட்டுபாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு வகையான எரிவாயு சிலின்டர்களில் ஒன்றையேனும் வாங்க முடியாமல் நுகர்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் ‘லிட்ரோ’ நிறுவனத்தின் தலைவர் தெரிவிக்கையில், டொலர் தட்டுப்பாடு காரணமாக எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இருப்பினும் நாளாந்தம் 300 – 400 டொன் எரிவாயு சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வங்கிகளில் இருந்து டொலர் கிடைக்காததால், எரிவாயு சிலின்டர்களை இறக்குமதி செய்வதற்கு பணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.