வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவினர்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இவ் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
இதன்போது, ‘எங்கே எங்கே உறவுகள் எங்கே, கையில் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே போன்ற கோசங்களை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எழுப்பினர்.
மேலும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் மூலமே எங்களுக்கு தீர்வு கிடைக்கும் என நம்பிக்கொண்டு இருக்கிறோம், எமக்கு சர்வதேசமே பதில் வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு நாங்கள் ஒவ்வொரு மாதமும் வந்து ஒரு தெருக்கூத்து போடுவது போல் எண்ணலாம். ஆனால் நாங்கள் எங்கள் பிள்ளைகள், கணவன்மார், என பலரை கொடுத்து விட்டு வேதனைக்கு மத்தியிலேயே இந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
கடந்த 12 வருடமாக வேதனையுடனும் கவலையுடனும் இருக்கின்றோம் எனவும் அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டினார்கள்.