
இலங்கையில் தரம் 10 முதல் 13 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை நவம்பர் 8 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தர மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு இன்று (30) வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டலில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொது இடங்கள் மற்றும் தொழில்களை முன்னெடுக்கும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டல்கள் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவினால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழிகாட்டல்கள் நவம்பர் 01 முதல் 15 வரை அமலில் இருக்கும் எனவும் சுகாதார அதிகாரிகள் தொற்று நோய் நிலைமையை மதிப்பாய்வு செய்து வெளியிடும் அறிக்கைகளை ஆராய்ந்து, நவம்பர் 15 க்குப் பிறகு பின்பற்ற புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட உள்ளன.
இதேவேளை, எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி முதல் 50 வீத மாணவர்களுடன் பிரத்தியேக வகுப்புக்களை ஆரம்பிக்க குறித்த அறிக்கையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தர மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகள் மட்டுமே இவ்வாறு ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.