நாட்டில் தற்போது கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளபோதும் எதிர்வரும் வரும் மாதங்களில் இந்த எண்ணிக்கை நிச்சயமாக அதிகரிக்கும் என்று சுகாதார நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய விசேட வைத்திய நிபுணர் மல்காந்தி கல்ஹேன இந்த தகவலை தெரிவித்தார்.
சுகாதார அமைச்சுக்கு கிடைத்துள்ள தரவுகளின் படி, கொவிட் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“தற்போது, மக்கள் வெளியில் செல்லும்போது கொவிட் வழிகாட்டுதல்களை புறக்கணிப்பதோடு, பொறுப்பற்ற முறையில் செயல்படத் தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
“சுகாதார விதிகளை இவ்வாறு தொடர்ந்து புறக்கணிப்பதால் ஏற்பட போகும் ஆபத்தை மக்கள் உடனடியாக உணராது உள்ளமை பரிதாபத்திற்குரியது” என்று அவர் மேலும் கூறினார்.
எனவே, பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் போதும் பொது நிகழ்வுகளில் பங்கேற்கும் போதும், சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்குமாறு வைத்தியர் மல்காந்தி கல்ஹேன மக்களை வலியுறுத்தினார்.