
இலங்கையில் இருந்து பிரிட்டனுக்கு பயணிப்பவர்கள் தொடர்ந்தும் ‘முழுமையாக தடுப்பூசி ஏற்றிக்கொண்டாலும் பயணிக்கத் தகுதி இல்லாதவர்கள்’ என்ற பட்டியலில் இருப்பதாக தெரியவருகிறது.
எனினும், குறித்த பட்டியலை பிரிட்டன் நவம்பர் 1 ஆம் திகதி புதுப்பிக்கவுள்ளதாக இலங்கைக்கான தூதரகம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 1 ஆம் திகதி புதுப்பிக்கப்படும் வழிகாட்டல்களில் பயணிக்க மூன்று நாட்களுக்கு முன்னரான கொவிட்- 19 பரிசோதனை, பயணித்து 2 ஆம் மற்றும் 8 ஆம் நாட்களில் பிசிஆர் பரிசோதனை என்பன உட்சேர்க்கப்பட்டுள்ளது.
பிரிட்டனுக்கு பயணிப்பவர்கள் வீட்டில் அல்லது ஹோட்டலில் 10 நாட்கள் வரை தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் புதிய வழிகாட்டலிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த விடயங்கள் இன்னும் புதுப்பிக்கப்படவுள்ளதாக பிரிட்டனின் பயண வழிகாட்டல் இணையதளம் குறிப்பிட்டுள்ளது.