July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எல்.பி.எல் 2021: ஜப்னா கிங்ஸ் அணியுடன் இணையும் வஹாப் ரியாஸ்

இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ‘லங்கா பிரீமீயர் லீக்’ தொடரின் இரண்டாவது பருவகால போட்டிகளில், ஜப்னா கிங்ஸ் அணியில் தென்னாபிரிக்க வீரர் பாப் டு பிளெசிஸ் மற்றும் பாகிஸ்தான் வீரர் வஹாப் ரியாஸ் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

பாப் டு பிளெசிஸ், ஜப்னா கிங்ஸ் அணியின் வெளிநாட்டு ‘ஐகான்’ வீரராக பெயரிடப்பட்டுள்ளார் எனவும் வஹாப் ரியாஸ், வெளிநாட்டு ‘டயமண்ட்’  வீரராக பெயரிடப்பட்டுள்ளனர் எனவும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா பிரீமியர் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணிகளுக்கும் தலா இரண்டு வெளிநாட்டு வீரர்களை இணைத்துக்கொள்ள முடியும் என லங்கா பிரீமியர் லீக் நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி, இந்த வீரர்களை ஜப்னா கிங்ஸ் அணி இணைத்துள்ளது.

தென்னாபிரிக்க அணியின் வீரரான பாப் டு பிளெசிஸ், இறுதியாக நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியதுடன், குறித்த அணி சம்பியனாகியிருந்தது. அத்துடன், இறுதிப் போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச்சென்றார்.

அதேநேரம் பாகிஸ்தான் அனுபவ வீரர்களில் ஒருவரான வஹாப் ரியாஸ், பாகிஸ்தான் சுப்பர் லீக் உள்ளிட்ட லீக் தொடர்களில் விளையாடி வருகின்றார்.

இந்த ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் தொடர் எதிர்வரும் டிசம்பர் 5 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதிவரை கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.